சினிமா தியேட்டர் கட்டணங்களை உயர்த்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்தபோது ஏகத்துக்கும் குஷியான திரையரங்க அதிபர்கள், பார்க்கிங் கட்டணம், தின்பண்டங்கள் விலை இவற்றை எல்லாம குறைக்கும்படி தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக உத்தரவு வந்ததை தொடர்ந்து முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க விஷாலை வறுத்தெடுத்து பேசிவருகின்றனர்..
சமீபத்தில் அப்படி பேசிய அபிராமி தியேட்டர் அதிபர் ராமநாதன் (இவர் தான் இதுல தலக்கட்டு) அப்படி ஒன்னும் பெரிசா விலை அதிகம் வச்சு விக்கிறதா தெரியலையே என்றார். அதற்கு ஒரு நிருபர், ரெண்டு சமோசா எண்பது ரூபாய்னு விக்குறாங்க என்றார்.. எவன் அப்படி விக்கிறான்னு சொல்லுங்க… உடனே நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.
அதற்கு அந்த நிருபர் உங்க தியேட்டர்ல தான் அந்த கூத்து நடக்குது என கூறவே, “அப்படியா’ என அசடு வழிந்த ராமநாதன், அதை என்னான்னு பார்க்க சொல்றேன் என நழுவினார். சமோசா ரேட்டையே குறைக்க முடியாத இவர் நடிகர்களின் சம்பள ரேட்டை குறைக்க சொல்றாருய்யா என திரையுலகில் கிண்டலாக பேசிவருகிறார்கள்.