“எங்களுக்கு போட்டி அஜித் ரசிகர்கள் அல்ல” ; கேரள விஜய் ரசிகர்களின் மெர்சல் பதில்..!


அஜித் படம் ரிலீசாகும்போது, அஜித் ரசிகர்களும், விஜய் படம் ரிலீசாகும்போது விஜய் ரசிகர்களும் பப்ளிசிட்டி மற்றும் புரமோசன்களில் கெத்து காட்டுவது வழக்கம். குறிப்பாக ஒருவரை ஒருவர் மிஞ்ச வேண்டும் என்கிற வெறியில் கட் வுட், பாலாபிஷேகம் என ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு மிரட்டுவார்கள்..

ஆனால் இந்த விஷயத்தில் தமிழ்நாட்டு விஜய் ரசிகர்களை விட கேரள விஜய் ரசிகர்கள் ஒருபடி மிஞ்சி விட்டனர் என்றே சொல்லாம். மேலும் கேரள விஜய் ரசிகர்கள் தங்களுக்கு போட்டி அஜித் ரசிகர்கள் இல்லை என்றும், தமிழ்நாட்டில் இருக்கும் விஜய் ரசிகர்கள் தான் தங்களுக்கு சரியான போட்டி என்றும், அவர்களை விட தாங்கள் மாஸ் காட்டுவோம் என கூறியுள்ளார்கள்.