மெர்சல் படம் குறித்து பாஜகவை சேர்ந்த அரசியல்வதிகள் விதவிதமாக படத்தையும் விஜய்யையும் விமர்சித்து வருகிறார்கள்.. ஆனால் பாஜகவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், இந்த விஷயத்தை நடுநிலை கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளார். இந்தப்படத்தில் விஜய் மீது எந்த தவறும் இல்லை என கூறியுள்ளார் எஸ்.வி.சேகர்.
மேலும் குறிப்பிட்ட அண்ட இரண்டு வசனங்களில் மட்டுமே உண்மை என்னவென்று தெரியாமல் வசனம் எழுதிய அட்லியின் ஆர்வக்கோளாறு தான் இந்த தவறுக்கு காரணம் என்றும், இதுபோன்ற விசஷயங்களை ஒரு நடிகராக விஜய்யால் கவனித்துக்கொண்டிருக்க முடியாதென்றும், இந்த விஷயங்களில் உள்ள உண்மை தன்மையை கூட சரியாக ஆராயாமல் சென்சார் சான்றிதழ் வழங்கியது சென்சார் அதிகாரிகளின் தவறு என்றும் அவர் குறிபிட்டுள்ளார்.