“பாஜக ஒரு விளம்பர ஏஜென்சி” ; நடிகர் மயில்சாமி கலாய்ப்பு..!


மெர்சல் பட விவகாரத்தில் பாஜக தலைவர்கள் படத்திற்கு எதிராக கோடி பிடித்துவரும் வேளையில், திரைப்படத்துறையை சேர்ந்தவர்களும் பாஜகவின் இந்தப்போக்கை விதம்விதமாக கலாய்த்து வருகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நகைச்சுவை நடிகர் மயில்சாமி, பாஜக ஒரு விளம்பர ஏஜென்சி என்கிற ரீதியில் கலாய்த்துள்ளார்.

மெர்சல் என்கிற படத்தை இன்று இந்தியா முழுவதிலும், குறிப்பாக ஆங்கில ஊடகங்கள் முழுவதிலும் கொண்டுசென்ற பெருமை பாஜகவுக்குத்தான் சேரும்.. வழக்கமாக பப்ளிசிட்டிக்கு ரெண்டு கோடி ரூபாய் வரை செலவு செய்வார்கள்.. ஆனால் பைசா செலவில்லாமல் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் மெர்சல் படத்திற்கு பாசக் பப்ளிசிட்டி செய்துள்ளது. மற்ற படங்களுக்கும் இதேபோல விளம்பரம் செய்தார்கள் என்றால் தயாரிப்பாளர்கள் சந்தோஷப்படுவார்கள் என கலாய்த்துள்ளார் மயில்சாமி.