அமலாபாலின் அடேங்கப்பா வரி ஏய்ப்பு..!


விஜய், விஷால் எல்லாம் தங்களது வருமானத்திற்கு முறையாக வரி கட்டவில்லை என ஒருபக்கம் புயல் கிப்பிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நடிகை அமலாபால் சமீபத்தில் அதிக விலைகொண்ட பென்ஸ் எஸ் கிளாஸ் கார் வாங்கியதில் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக விலைகொண்ட பென்ஸ் எஸ் கிளாஸ் சொகுசுக் காரை அமலாபால் வாங்கியதாகத் தெரிகிறது. சொந்தமாநிலமான கேரளாவில் அந்த காரைப் பதிவு செய்திருந்தால் வரியாக மட்டுமே, காரின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதத்துக்கும் அதிகமாக, அதாவது ரூ.20 லட்சத்துக்கும் மேல் செலுத்த வேண்டும்.

அதைத் தவிர்ப்பதற்காக அந்த சொகுசுக்காரை புதுச்சேரியில் போலி முகவரி மூலம் அவர் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் புதுச்சேரியில் உள்ள மாணவர் ஒருவரின் முகவரியில் அந்த கார் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவருக்கு எந்த தகவலும் தெரியாது என்றும் தெரியவந்துள்ளது. வரி ஏய்ப்பு செய்வதை இப்படியா பகிரங்கமாக செய்வார் அமலாபால்..?