தமிழ்சினிமாவை பொறுத்தவரை நயன்தாரா தான் நடிக்கும் இந்தப்படத்தின் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள மாட்டார். அவரை படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் போடும் போது அதை ஒரு கண்டிஷன் ஆகவே குறிப்பிட்டிருப்பார். சரி.. அவர் வழி தனி வழி என ஒருகட்டத்திற்கு மேல் அவரை யாரும் வற்புறுத்தவில்லை..
ஆனால் தற்போது நயன்தாரா தான் நடித்துள்ள ‘அறம்’ படத்திந பப்ளிசிட்டிக்காக தியேட்டர்களுக்குச் சென்றது இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அறம் படத்தை ஓட வைப்பதற்காக அவர் தியேட்டர்கள் வரை போனதுதான், அந்தப் படத்தைப் பற்றி இப்போது அதிகம் பேச வைத்துள்ளது. அதனால், நேற்று பல தியேட்டர்களில் படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியிருக்கிறது
இதுநாள் வரை நயன்தாரா வராதது கூடப் பரவாயில்லை, அடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களையும் இந்தப்படம் போன்றே பிரமோஷன் செய்ய வருவாரா என கேள்வி எழுந்துள்ளது. அதேசமயம் ‘ஆறாம்’ படத்தை தனது பினாமி மூலம் நயன்தாரா தயாரித்துள்ளதாக ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்தது. அதை மெய்ப்பிப்பது போல இந்தப்படத்தை பற்றிய டிவி சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதை தொடர்ந்து, இதோ இப்போது தியேட்டர்களுக்கு விசிட் அடித்துள்ளார். இதன்மூலம் இந்தப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர் நான் தான் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நயன்தாரா.