பாலியல் வழக்கில் கைதான ‘பாகுபலி’ நடிகர்..!


உலக சினிமாவில் வரலாற்றில் முத்திரைப் பதித்த படம் ‘பாகுபலி’. இந்தப் படத்தில் நடித்த அத்தனை நடிகர்களின் கேரக்டர்களும் நம் கண்முன் நிற்கும். இந்தப்படத்தில் பிரபாஸின் வளர்ப்பு தந்தையாக நடித்தவர் நடிகர் வேங்கடேச பிரசாத். இவர் ஐதராபாத்தில் உள்ள பிரபல மல்டிபிளக்ஸ் திரையரங்கமான ஐமாக்ஸில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

அங்கு வேலைசெய்யும் பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஒரு பெண் அளித்த புகாரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலீஸ் விசாரணையில், அப்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள கேட்டபோது வேங்கடேச பிரசாத் கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இதே போல தொடர்பு வைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

மேலும் கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக பாலியல் ரீதியாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 7 வருடங்களாக அப்பெண்ணுடன் பழகியதில், அப்பெண் இருமுறை கருவுற்றிருந்தாராம். இதனால் பிரசாத் அப்பெண்ணை இருமுறையும் அக்கருவை கலைக்க சொல்லி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கைது அவர் கைது செய்யப்பட்டதோடு அவர் தீவிர விசாரணையில் இருப்பதாக கூறப்படுகிறது.