சதுரங்க வேட்டை படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் நகைச்சுவை நடிகர் மனோபாலா. அந்தப்படம் வெற்றிகரமாக ஓடி அவருக்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்தது. அதை தொடர்ந்து பாபி சிம்ஹாவை வைத்து ‘பாம்புச்சட்டை படத்தை தயாரித்தார். அந்தப்படம் சரியாக போகாவிட்டாலும் அதை ராதிகா சரத்குமார் கம்பெனிக்காக பர்ஸ்ட் காபி அடிப்படையில் பணத்தை வாங்கிக்கொண்டு தயாரித்து கொடுத்ததால் நஷ்டத்தில் இருந்து தப்பினார் மனோபாலா.
அடுத்தததாக தற்போது சதுரங்க வேட்டை-2 படத்தை தயாரித்து வருகிறார் மனோபாலா.. இந்தப்படத்தில் அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்து வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாளாகியும் படம் ரிலீஸாவதில் தாமதம் ஆகிவருகிறது.. இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தற்போது இந்த தாமதத்தின் முக்கிய காரணம் ஹீரோ அரவிந்த்சாமி தான் என்கிற உண்மை வெளிப்பட்டுள்ளது..
தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் பைனான்சியர் அன்புச்செழியன் தான் இந்தப்படத்திற்கும் பைனான்ஸ் செய்துள்ளாராம். ஆனால் படத்தின் பட்ஜெட் திட்டமிட்டதை விட அதிகமாகிவிட்டதாம். இதனால் அரவிந்தசாமிக்கு ஒன்னும் ஒன்றரை கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளாராம் மனோபாலா.
ஆனால் அரவிந்தசாமியோ, மீதிப்பணம் முழுவதையும் கொடுத்தால் தான் டப்பிங் பேசவருவேன் என கறாராக சொல்லிவிட்டாராம். இதனால் என்ன செய்வது என்று தெரியாமலும் மேலும் கந்துவட்டிக்கு பணம் வாங்கி படத்தை முடிப்பதா என முடிவெடுக்க முடியாமலும் ரத்தக்கண்ணீர் வடிக்கிறாராம் மனோபாலா.