ரஜினியை கிண்டலடித்து படம் எடுப்பதா..? ; கஜினிகாந்த் மீது ரசிகர்கள் கோபம்..!


ரஜினியின் பட டைட்டில்களை, அவரது பட பாடல் வரிகளை, அவ்வளவு ஏன் அவர் பேசிய பஞ்ச டயலாக்குகளை எல்லாம் தங்களது படத்திற்கு டைட்டிலாக வைத்தார்கள் பலர். அப்போதெல்லாம் ஒரு சிறிய சலசலப்பு மட்டுமே எழும்.. ஆனால் தற்போது ஆர்யா நடிக்கும் படத்திற்கு கஜினிகாந்த்என பெயர் வைத்து ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்கள்.

ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்மத்தின் தலைவன்’ படத்தைப் போன்று ஆர்யா இருப்பது போன்று ‘கஜினிகாந்த்’ ஃபர்ஸ்ட் லுக்கை வடிவமைத்திருக்கிறது படக்குழு. ரஜினிகாந்த் பிறந்த நாள் கொண்டாடும் இந்த நாளில் அவரை அவமதிக்கும் வகையில், கஜினிகாந்த் என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.