நடிகர் ஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக 2017 டிசம்பர் 17 அன்று Santhom மில் உள்ள C.s.i. Higher secondary school for deaf இல் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்ட முகாமின் நிறைவு நாளான ஞாயிறு அன்று சென்னையைச் சார்ந்த எழும்பூர் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவிகள் 250 பேருக்கு உணவு சார்ந்த விழிப்புணர்வு விவசாய பயிலரங்கம் மற்றும் விவசாயம் சார்ந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஆரி அவர்கள் மாணவியர்களுக்கு விவசாயம் சார்ந்த கல்வி முறையும் விவசாயத்தை பற்றிய விழிப்புணர்வு வளர வேண்டும் என்றும் மேலும் நாம் பாரம்பரிய உணவு முறைகளைப் பற்றியும் மாணவிகள் இடையே உரையாற்றினார், இந்நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு எளிய முறையில் வீட்டில் மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய செய்முறை பயிற்சியாக அவரை, வெண்டை, புளிச்சக்கீரை, பூசணிக்காய், போன்ற நாட்டு விதைகளை CSI Higher Secondary for the deaf பள்ளியில் விதைத்து நானும் ஒரு விவசாயியாக மாறுவோம் மாற்றுவோம் என உறுதிமொழி மேற்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு :
CSI Higher Secondary School for the deaf Mr.James Albert ( head master )
Mr.Shakti ( filmmaker )
Quaid-e-Millath government college for women
Asst Professor s
Dr A.subashini, Dr R. Josephine, Sharmila, Dr c.s. Latha, Ms. J. Joan ruby.!