ஓவியா இப்படி பண்ணலாமா..?


நடிகையாக தான் நடித்த படங்களை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பெண்கள், குழந்தைகள் உட்பட அனைவரது மனதிலும் இடம் பிடித்த ஒரு நடிகையாக தனி இமேஜைப் பெற்றார் ஓவியா. பாதியிலிருந்து நிகழ்ச்சியில் வெளியேறினாலும், அந்த நிகழ்ச்சி முடியும் வரை ஓவியாவைப் பற்றி பேசாதவர்களே இல்லை.

அவருடைய வெளிப்படையான குணமே அவருக்கு அப்படி ஒரு வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால், புது வருடத்தை முன்னிட்டு சிம்பு இசையமைத்து உருவாக்கிய ‘மரண மட்டை’ பாடலில் ஓவியாவும் பங்குகொண்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சிம்புவுடன் சேர்வதே குற்றம் என நினைக்கப்படும் இந்நாளில் அவருடன் ஒரு பாடலைப் பாடி ஓவியா அவருக்கென இருந்த இமேஜைக் கொஞ்சம் கெடுத்துக் கொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.

அதுவும் பாடலின் ஆரம்பத்திலேயே ஓவியா குடித்து விட்டு பேசுவது போல இடம் பெற்றுள்ள சில வரிகள்… “நியூ இயர் நைட்டு ஆவலமா டைட்டு, போன காதலை மனசு இன்னும் மறக்கவில்லை, பாட்டிலைத்தான் தொறக்குறோம், பழசெல்லாம் மறக்கறோம்” என குடிக்கத் தூண்டும் வரிகளை சேர்த்திருக்கிறார்கள்.

புத்தாண்டை சிறப்பாக நல்லெண்ணங்களுடன் கொண்டாடி மகிழுங்கள் என மக்களை வாழ்த்தி செய்திகளையும், பாடல்களையும் பலரும் வெளியிடும் போது, சிம்பு சரக்கடித்து மட்டை ஆகிவிடுங்கள் என்று எழுதி, இசையமைத்து, பாடியிருக்கிறார் என்றால் அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் அதற்கு ஓவியாவும் உதவியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.