ஜெய்யால் நட்டம் ; பலூன் தயாரிப்பாளர்கள் புகார்..!


சமீபத்தில் ஜெய் நடிப்பில் வெளியான ‘பலூன்’ திரைப்படம் ஹாரர் த்ரில்லராக இருந்தும்கூட பெரிய வரவேற்பை பெறவில்லை. அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கிய இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களான நந்தகுமார் மற்றும் அருண்பாலாஜி ஆகியோர் தங்களது படத்தின் தோல்விக்கும், அதனால் ஏற்பட்ட நட்டத்திற்கும் ஜெய் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தப்படத்திற்கு ஜெய் குறித்த நேரத்தில் படப்பிடிப்பிற்கு வராததாலும், அப்படியே வந்தாலும், தனது இஷ்டத்திற்கு கிளம்பி போனதாலும் படப்பிடிப்பு செலவு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அதிகரித்து விட்டதாம். தற்போது படத்தின் தோல்வியால் வசூல் அடிவாங்கியதால் இந்த நட்டத்தை ஜெய் சரிக்கட்ட வேண்டும் எனவும் அதுவரை அவர் வேறு படங்களில் நடிக்க தடைவிதிக்க வேண்டும் எனவும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தன்மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், தான் குறித்த நிறத்தில் படப்பிடிப்பில் கலந்துகொண்டதாகவும் ஜெய் மருத்துள்ளாராம்.