பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் ஜோடியாக நடித்த அளவில் தான் ரசிகர்கள் பலருக்கு பிரபாஸ்-அனுஷ்காவின் நட்பு பற்றி தெரியும்.. ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன்னரே ‘மிர்ச்சி’ படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.
அதனால் இன்றுவரை இருவரும் நல்ல நண்பர்களாக(!?) இருந்து வருகின்றனர். குறிப்பாக அனுஷ்கா தனது புதிய பட தேர்வுகள் குறித்து பிரபாஸுடன் விவாதித்தே முடிவெடுக்கிறாராம்.
அந்தவகையில் தன்னை தேடிவந்த இந்திப்பட வாய்ப்பு ஒன்றை, அனுஷ்கா வேண்டாம் என நிராகரித்து விட்டதாக சொல்லப்படுகிறது. காரணம் அனுஷ்கா இந்தியில் நடிக்கும் முதல் படம் தன்னுடன் ஜோடியாக நடிப்பதாக இருக்கவேண்டும் என பிரபாஸ் விரும்புகிறாராம்.
அதுமட்டுமல்ல அந்தப்படத்தை பிரபாஸின் மிர்ச்சி படத்தை தயாரித்த, தற்போது அவர் நடிக்கும் சாஹோ படத்தை தயாரிக்கும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கவேண்டும் எனவும் நினைக்கிறாராம் பிரபாஸ்.
இந்தி போன்ற தெரியாத மொழியில், தெரியாத இயக்குனருடன் பயணிப்பதற்கு, தனக்கு வசதியான தயாரிப்பு நிறுவனம் வேண்டும் என்பது பிரபாஸின் எண்ணமாம்.