சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு ‘என் காதலி சீன் போடுறா’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர்.
இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, விஜய் டிவி.கோகுல், டாக்டர் சரவணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – வெங்கட்
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – ராம்சேவா ,ஏகாதசி
கலை – அன்பு
நடனம் – சாண்டி, T.முருகேஷ்
ஸ்டன்ட் – மிரட்டல் செல்வா
எடிட்டிங் – மாரி
தயாரிப்பு மேற்பார்வை – தண்டபாணி
தயாரிப்பு – ஜோசப் பேபி.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ராம்ஷேவா
இவர் ராமகிருஷ்ணன் நடித்துள்ள டீக்கடை பெஞ்ச் படத்தை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குனர் ராம்சேவா கூறியதாவது …
இன்றைய சமூகத்தில் எல்லோருமே
புத்திசாலிகள் தான் ஆனால் அவர்களை சாமார்த்தியமாக ஏமாற்றத் தெரிந்த அது புத்திசாலிகளும் அவர்களுக்குள்ளேயே கலந்து இருப்பதும் உண்மையே.
இப்படி நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.
இந்தப் படத்திற்கு பிறகு எந்த குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஏமாறாமல் இருந்தால் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததாக மகிழ்வோம்.
படப்பிடிப்பு சென்னை,பாண்டி, பொள்ளாச்சி, ஆனமலை போன்ற இடங்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது. என்றார் இயக்குனர்.