இன்று இணையதளத்தில் ஆபாச வலைத்தளங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காமல் இருக்கிறது. ஒரு காலத்தில் பணத்திற்கு விலைபோகும் நபர்களை வைத்து எடுக்கப்பட்டு வந்த வீடியோக்கள், இன்று ஒவ்வொருவர் வீட்டிலும் அந்தரங்கமாக நிகழும் படுக்கையறை காட்சி வீடியோக்களாக மாறி வலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன.. இந்த பயங்கரத்துக்கு யார் துணைபோகிறார்கள் என்பதை தோலுரித்து காட்டும் படம் தான் இந்த x வீடியோஸ்.
பத்திரிகையாளரான அஜய்ராஜ் மற்றும் நிஜய் இருவரும், இணையதளங்களில் உலவும் ஆபாச வீடியோக்கள் குறித்த விழிப்புணர் ஆய்வு கட்டுரை எழுத முற்படுகிறார். அப்போதுதான் தனது நெருங்கிய நண்பனும் அவரது மனைவி ஆக்ரிதாவும் இணைந்த அந்தரங்க வீடியோ இணையத்தில் உலாவருவதை பார்க்கிறார். இந்த விஷயம் தெரிந்து நண்பன் தற்கொலை செய்துகொள்கிறார்.
குடும்ப பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் எப்படி எடுக்கப்படுகின்றன..இருவருக்கும் மட்டுமேயான அந்தரங்கம் எப்படி இணயத்தில் வெளியாகிறது என தங்களது போலீஸ் நண்பன் ஷான் உதவியுடன் துப்புத்துலக்க ஆரம்பிக்கிறார்கள்.. அவற்றின் பின் பின்னணியில் கண்ணுக்கு தெரியாத பலரும் கண்ணுக்கு தெரிந்தே ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒன்றும் இருப்பதையும் கண்டுபிடிக்கின்றனர்.
அதன்பின் அவர்களுக்கு எப்படி வலைவிரிக்கின்றனர்.. விரித்த வலையில் விஷமிகள் சிக்கினார்களா என்பது மீதிக்கதை.
இன்று ஒவ்வொருவரிடமும் ஆண்ட்ரா ய் டு செல்போன் இருப்பதால் தங்கள் மனதில் தோன்றும் விகாரமான ஆசைகளை படம்பிடிக்க தாங்களே கேமராமேன், டைரக்டராக மாறி விடுகின்றனர். அந்தரங்கம் ரகசியமாகவே இருக்கவேண்டும் என்பதை மீறி, தங்களது படுக்கையறை சந்தோஷங்களை படம்பிடித்து அந்த நிமிடங்களில் வேண்டுமானால் சந்தோஷமாக இருக்கலாம்.. ஆனால் அதனால் வரப்போகும் விபரிதங்கள், மானத்தை விலைபேசி, உயிருக்கு உலை வைத்துவிடும் என்பதை மிகவும் டீடெயிலாக படமாக்கி இருக்கிறார் இயக்குனர் சஜோ சுந்தர்.
படத்தில் நடித்துள்ள புதுமுகங்கள் அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் உள்ளிட்ட பலரும் இது ஆபாசப்படம் அல்ல, கட்டாயம் பார்க்கவேண்டிய விழிப்புணர்வு படம் என்பதை காட்ச்சிக்கு காட்சி நிரூபிக்கிறார்கள் . படத்தில் சில காட்சிகள் இலைமறை காயமறையாக காட்டப்பட்டிருந்தாலும் அது கதையின் தேவை கருதியே என்பதை நம்மால் உணரமுடிகிறது.. கட்டுப்பாடு இல்லாமல் மொபைல் போன் பயன்படுத்துவரா நீங்கள்..? இந்தப்படத்தை கட்டாயம் ஒருதடவை பார்த்துட்டு வாங்க..