மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் FEFSI தலைவர் ஆர்.கே. செல்வமணி , தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு , 5 ஸ்டார் கதிரேசன் , நடிகர் பார்த்திபன் , மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் FEFSI தலைவர் R.K.செல்வ மணி பேசியதாவது:-
இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்கள் தங்களுக்கென மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கியிருப்பது இதுதான் முதல் முறை.அதற்கு உதவியாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும்,மார்ட்டின் குருஷ் கம்பெனிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.மூன்று மாதத்திற்கு முன் தமிழ் திரைப்பட துறையில் ஏற்பட்ட வேலை நிறுத்தம் ரீ ஜென்ரேஷன் இந்த நிகழ்வுக்கு முன் விரைவில் தமிழ் திரைப்பட துறையில் மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது இன்று அது முதல் படி எடுத்து வைக்கப்பட்டுள்ளது.இதிலிருந்து ஏறகுறைய 60 நாட்களில் முறைப்படி செய்து உலக தரத்திற்கு இணையாக அனைத்து விதமான தொழில்நுட்பத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சியில் இருக்கும் திரையரங்கிற்கும் உடுமலை சண்முகா திரையரங்கிற்கும் டெலிவரி செய்து சோதனை சொய்யப்பட்டது.100% இது வெற்றி அடைந்தது.இது ஒரு நல்ல நிறுவனம் முதல் அடி எடுத்து வைத்துள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தன் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான முதல் ஆரம்பம்.இதன் விலை தயாரிப்பாளர்கலுக்கு சாதகமாக இருக்கும்.சரியான விலையில் தரமான பொருளை தர அந்த நிறுவனம் முன் வந்துள்ளது.அந்த நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இந்த முயற்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்பட தயாரிப்பாளர்கள் தனக்கென சொந்தமாக மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்கபடலாம்.இது யாருக்கும் எதிராக ஆரம்பிக்கபட்டதல்ல.திரைப்பட துறை பல்வேறு விதமாக வளர்ச்சி அடைகிறது.தயாரிப்பாளர்கள்,திரையரங்க உரிமையாளர்கள்,விநியோகஷ்தகர்கள் அவர்களுக்கு ஒரு டெக்னிஷியனாக நட்புடன் ஒரு விஷியத்தை விளக்க விரும்புகிறேன் என்னவென்றால் தற்போது மாறும் தொழில்நுட்பத்திற்கேற்ப நாம் மாறவில்லை என்றால் நம் இடத்திற்கு வேறு யாராவது வந்துவிடுவார்கள்.பிலிமிலிருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு 5 முதல் 10 வருடம் தேவைப்பட்டது.இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல அவ்வளவு காலம் தேவைப்படாது 5 மாதங்களே போதுமானது.இந்த தொழில் நுட்பத்தை தயாரிப்பாளரோ,விநியோகஷ்தர்களோ புரிந்துகொள்ளவில்லை என்றால் இத்துறை நம்மை விலக்கிவைத்துவிடும்.தயாரிப்பாளர்கள்,விநியோகஷ்தர்கள்,திரையரங்க உரிமையாளர்கள் பகைமை இல்லாமல் எந்த கருத்து வேறுபடாக இருந்தாலும் நமக்குள்ளேயே பேசி சுமுகமாக தீர்ப்பது நல்லது.இது தயாரிப்பு துறை தனக்கான சந்தையை தானே உருவாக்கிய நுட்பமே தவிர யாருக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்டதல்ல.இதனால் தயாரிப்பாளர்களுக்கு 100 சதவீதம் நன்மை உண்டு.சென்சாருக்கு ஒரு திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.அதுவும் மிக குறைந்த விலையில் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதிமொழி அளித்துள்ளார்கள்.நிர்வாகிள் தங்கள் உறுப்பினர்களுக்கு விளக்க வேண்டும்.தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்கள் நன்றாக இருக்க முடியும்.இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன் படுத்த வேண்டும் நன்றி வணக்கம்.
விழாவில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது:-
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது நாங்க தான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம்.ஏன்னென்றால் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.அது போல தான் இந்த மைக்ரோ பிளக்ஷ் ஸ்டுடியோவின் முதல் படி.ஒருவன் பார்மஸியில் கேட்கிறான் ஏன்பா தேள் கொட்டியது என்று மருந்து வாங்கி சென்றாயே இப்போது மறுபடியும் எதுக்கு வந்தாய் என்று கேட்கிறான் அதன்கு அவர் மருந்து கொட்டிவிட்டது என்றான்.தேள் கொட்டினால் கூட பரவாயில்லை மருந்து கொட்டியதேன்றால் ரொம்ப கஷ்டம்.அதுபோல் சினிமா வியாபாரத்தில் என்ன பிரச்சனையும் இருக்கலாம் அதற்கு நமக்குள்ளேயே ஒற்றுமை இருந்தால் தான் அதை சீர் செய்ய முடியும்.குறிப்பா திரு செல்வமணி பெப்சியின் தலைமைக்கு அவர் வந்த உடன் நல்ல ஒற்றுமை வந்துள்ளது.நான் கிட்டதட்ட 25வருடம் சினிமாவில் உள்ளேன்.அப்போது இல்லாத ஒற்றுமை இப்போது வந்துள்ளது.தமிழ் சினிமா செல்வமணி சொன்னது போல் டெக்னிக்கெல்லாம் புரிந்து கொண்டு சினிமாவை நல்ல முறையில் கொண்டு வருவோம்.திரு விஷால் அவர்களுக்கும் திரு மார்டின் அவர்களுக்கும் நன்றி.
விழாவில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் S.R.பிரபு பேசியதாவது:-
இவ்விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.முதலாவதாக மைக்ரோ பிளக்ஷ் குலோபல் நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.மூன்று மாதத்திகு முன் ஆளுக்கொரு கருத்துக்களையும் விவாதத்திலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம்.அடிப்படை பிரச்சனை என்னவென்று பார்த்த போது தயாரிப்பாளர்களுக்கு சுய சார்பு நிலை என்று சொல்லலாம்.அதன் தொகுப்பை நாமே மேற்கொண்டு திரையரங்கத்தின்கு கொண்டு செல்லும் விஷயம் திரையரங்கிற்கு சாதனங்களை கொடுக்கும் இன்னொரு தொழிலை செய்ததால் அது சார்ந்த ஒரு தொழிலை காப்பாற்ற இன்னொரு சிக்கல் குளப்பம் ஏற்பட்டு அதை சரி செய்ய என்ன செய்யலாம் என்று யேசித்த போது நமக்கு தோன்றிய விஷியம் தயாரிப்பாளர் சங்கம் மூலமே மாஸ்டர் மற்றும் கண்டன்ட் டெலிவரி செய்ய வேண்டும் என்று தோன்றியது.பல நிறுவனங்கள் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்து இதை கொண்டு வர வேண்டும் என முன் வந்தார்கள்.தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மாறலாம் ஆனால் அதன் முயற்சிகள் மாறாது.நல்ல டெக்னாலஜியை அதை நன்றாக தெரிந்தவர்கள் எடுத்து சென்றால் அது நீண்ட நாள் நிலைக்கும்.இதற்கு கார்த்தி போன்ற நண்பர்கள் துணை நின்றார்கள்.திரு கார்த்தி அவர்களுக்கும் திரு அல்பர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.பெரிய வேலை நிறுத்தத்திற்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளோம் இந்த செட்டப்பை உருவாக்க இவ்வளவு காலம் எடுத்துள்ளது ஆனால் 6மாதங்கள் இணைந்து நமக்கு இந்த செட்டப்பை கொடுத்துள்ளார்கள்.அதில் அவர்களின் அர்பணிப்பு தெரிகிறது.இதன் தொடக்கமும் முதல் படியும் வர இரண்டு மாதங்களாகும்.அடுத்த கட்டத்திற்கு நாம் நினைத்ததை கொண்டு செல்ல இந்த முதல் கட்டத்திற்கு இந்த நிறுவனம் தயாராக உள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக மைக்ரோ குலோபல் நிறுவனத்திற்கு நன்றியை தொரிவித்துக் கொள்கிறேன்.
விழாவில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் பேசியதாவது:-
மைக்ரோ பிளக்ஷ் நிறுவனத்தை துவக்கி வைக்க வந்துள்ள மார்ட்டின் அவர்களுக்கும்,செல்வமணி அவர்களுக்கும்,பத்திரிக்கை துறை சார்ந்த அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையாக ஒரு மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்க ஏகப்பட்ட போராட்டங்கள் இருந்தது.அந்த போராட்டத்தில் 48 நாள் வேலை நிறுத்தம் நடந்தது அப்போது அடிப்படை விஷியமாக தயாரிப்பாளர் சங்கம் சார்பாக மாஸ்டர் யூனியன் வேண்டும் என்ற கோரிக்கையாக இருந்தது.அப்போது நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி டெக்னாலஜியை அப்டேட் பன்னக்கூடிய ஒரு நிறுவனம் வேண்டும் என்ற போது எல்லா விதத்திலும் சேர்ந்து இருக்கும் திரு அல்பர்ட் அவர்களுக்கும் அவருடன் பணியாற்றிய திரு கார்த்தி அவர்கள் கிட்டதட்ட பத்து ஆண்டுகள் சாப்ட்டுவேரில் அப்டேட்டாக தெரிந்தவர்.அடிப்படை ஆரம்பம் தான் மைக்ரோ பிளக்ஷ் என்ற விழா.இது தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கும்,திரைதுறையினருக்கும்பயன் அளிக்கும்.அனைவருக்கும் மேற்கொண்டு பல நற்செய்திகளை மைக்ரோ பிளக்ஷ் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்.