படத்தை பற்றி இயக்குனர் ஈ. இப்ராகிமிடம் கேட்டதற்கு, தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டுவித படங்களுக்கு என்று தனி இடமுண்டு. ஒன்று திகில், இன்னொன்று நகைச்சுவை. என்னதான் கருத்து சொல்ல படங்கள் வந்தாலும் மக்களை இவ்வகை திரைப்படங்கள் ரசிக்க வைக்க மறப்பதில்லை. அதுவும் திகிலும் நகைச்சுவையும் சேர்ந்து வருகின்ற படங்கள் மக்களின் பெரும் கவனிப்புக்கும் ஆதரவுக்கும் முன்வரிசையில் இடம் பிடிக்கின்றன. இப்படி வெற்றி பெற்ற படங்களுக்கு நாம் பல உதாரணம் காட்டலாம்.
அப்படி திகிலும், நகைச்சுவையும் சேர்ந்து வெளிவரக் காத்திருக்கும் படம் தான்” கொம்பு” ஏற்கனவே வந்த திகில் பேய் படங்களுக்கும் இந்த படத்திற்கும் என்ன வித்தியாசம்? திகில் பேய் படங்கள் வித்தியாசப்படுவது கதை சொல்லப்படும் விதத்திலும் அந்த கதையின் பயத்தை மக்களை உணர வைக்கும் நடிகர்களின் நடிப்பிலும் தான்.
ஸ்ரீ சாய் ஸ்ரீனிவாசா நிறுவனத்தின் சார்பில் எம். பன்னீர்செல்வம், பி. வானதி தயாரிப்பில் எடுக்கப்பட்ட “கொம்பு”திரைப்படத்தில் லொள்ளுசபா புகழ் ஜீவா கதாநாயகனாகவும், “தமிழ் படம்” படத்தின் நாயகி திஷா பாண்டே கதா நாயகியாகவும் நடிக்க, பாண்டியராஜன், கஞ்சா கருப்பு, சுவாமிநாதன், காயத்ரி, அஷ்மிதா ஆகியோரும் நடிக்கின்றனர். ஏற்கனவே திகில் படங்களில் நம்மை பயப்படுத்தியும் சிரிக்கவும் வைத்த நடிகர் பட்டாளமே இந்த படத்திலும் இருப்பதால் நம்மை பயத்தோடு சிரிக்கவும் வைப்பார்கள்.
ஏற்கனவே வந்த பேய் படங்களில் இருந்து புதுமையை காட்ட வேண்டும் என்ற ஆவலும், அந்த புதுமையை எவ்வளவு எளிதாக மக்களின் மன ஓட்டதோடு ஒத்துப்போகும் அளவுக்கு திரைக்கதையில் சொல்லமுடியும் என்ற முனைப்புடனும் காட்டி உள்ளோம். அது மட்டும் இல்லாமல் இக்கதை வெறும் திகில், பேய் படம் என்று மட்டும் இல்லாமல் பெண்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு அவசியம் என்பது கூறியிருக்கிறோம் “. என்றார்.
மேலும் அவர் கூறும்போது,” நடிகர் ஜீவா ஏற்கனவே நடித்த காமெடி, காதல் என்ற தளங்களில் இருந்து தன்னை திகில், காமெடி, காதல் என்ற மூன்று தளங்களையும் சேர்த்து தன்னை வித்தியாசப்படுத்தி நிரூபிக்க கொம்பு மூலம் முயற்சி எடுக்கிறார்.
நடிகை திஷா பாண்டே தமிழ் படத்தில் நடித்ததற்கு பிறகு இப்படத்தின் மூலம் கதைக்கு தேவையான நடிப்பையும், திரைக்கு தேவையான அளவு கவர்ச்சியும் என தனக்கான முத்திரையை மீண்டும் பதித்துள்ளார்.
மொத்தத்தில் ஜூலை 27ம் தேதி காலை 9மணிக்கு first look, ஜூலை 31 டீசர் வெளியாவதில் தொடங்கி கொம்பு படத்தின் ப்ரோமோசன் பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன. “கொம்பு” படத்தின் திகில் மக்களின் மனதை எவ்வாறு சென்றடைகிறது எவ்வாறு ஈர்க்கிறது என்பதை ரிலீஸ் வரை பொறுத்திருந்து திரையில் முழுதாய் காண்போம்.
“. என்றார்.
கொம்பு படத்தின் தேவ்குரு இசையையும், சுதீப் ஒளிப்பதிவையும், கிரேசன் படத்தொகுப்பையும், ராதிகா நடனபயிற்சியையும், கஜினிகுபேந்தர் சண்டைபயிற்சியையும், கார்த்திகேயன் நிர்வாகதயாரிப்பையும், கவனிக்கின்றனர்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி ஈ. இப்ராகிம் டைரக்ட் செய்யும் “கொம்பு” படத்தை எம். பன்னீர்செல்வம், பி. வானதி இருவரும் தயாரிக்கின்றனர்.