ஸ்டண்ட் மாஸ்டருடன் சேர்ந்து தயாரிப்பாளரை ஏமாற்றிய இமைக்கா நொடிகள் இயக்குனர் .!


நயன்தாரா, அதர்வா நடிப்பில் அஜய் ஞானமுத்து டைரக்சனில் உருவாகியுள்ள படம் தான் ‘இமைக்கா நொடிகள்’.. இந்தப்படத்தை கேமியோ பிலிம்ஸ் ஜெயக்குமார் தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியபோது, இயக்குனரும் ஸ்டண்ட் மாஸ்டர் சிவாவும் தன்னை ஏமாற்றிவிட்டதாக வேடிக்கையாக கூறினார் தயாரிப்பாளர் ஜெயகுமார்.

இந்தப்படத்தின் பட்ஜெட்டில் சண்டைக்காட்சிகளுக்கு என மிகப்பெரிய தொகையை தயாரிப்பாளர் ஒதுக்கவில்லையாம்.. காரணம் சண்டைக்காட்சிகள் பற்றி ஆரம்பத்தில் பேசும்போது லைட்டாகத்தான் சொல்லி வைத்திருந்தார்களாம்.. ஆனால் அந்த காட்சிகளை படமாக்கும் நேரம் வந்தபோதுதான் அதை எப்படி பிரமாண்டமாக படமாக்கப்போகிறோம் என்றே இயக்குனரும் ஸ்டண்ட் மாஸ்டரும் விவரித்தார்களாம்.

அதற்கு ஆகும் செலவை கேட்டு மிரண்டுபோன தயாரிப்பாளர், கதைக்கு அவசியம் தேவை என்பதால் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாராம். இதை குறிப்பிட்டுத்தான் இருவரும் தன்னை ஏமாற்றியதாக பேசினார் தயாரிப்பாளர் ஜெயக்குமார்.