நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக, நல்ல கேரக்டர்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் விதார்த்.. அந்தவகையில் தற்போது, ‘வண்டி’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் விதார்த். மலையாள தயாரிப்பாளர், மலையாள இயக்குனர் என ஒரே மலையாள வாசம் வீசும் இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இதில் சில இயக்குனர்கள், குறிப்பாக ஜி.வி.பிரகாஷ் படங்களை இயக்கிய இயக்குனர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அதில் ‘த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, சிம்பு நடித்த ‘ஏஏஏ’ படங்களை இயக்கிய அதிக ரவிச்சந்திரனும் ஒருவர்.
இவர் விதார்த்தை மிகச்சிறந்த, திறமையான நடிகர் என வாழ்த்தி பேசினார்.. விதார்த் பேசும்போது, பதிலுக்கு எல்லோருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.. அப்படி பேசும்போது, ஆதிக்கை நோக்கி, ப்ரோ உங்க படத்துல கூட நான் நடிப்பேன் ப்ரோ.. நான் ஒரே மாதிரி சீரியஸாத்தான் நடிப்பேன்னு நினைச்சுடாதீங்க.. எல்லா வெரைட்டியும் பண்ணித்தான் பார்ப்போமே” என கூறினார்.
‘ஏ’ ரக படங்களை எடுப்பவர் என ஆதிக்கின் மீது ஏற்கனவே ஒரு முத்திரை இருக்கும் நிலையில், ‘உங்க படத்துல கூட’ என எதார்த்தமாக விதார்த் பேசியது அரங்கில் அமர்ந்திருந்தவர்களை கைதட்டட்டி சிரிக்க வைத்தது. அதேசமயம் இந்த ‘புகழுரைக்கு’ சொந்தக்காரரான ஆதிக் ரவிச்சந்திரனை விதாரத்தின் பேச்சு நெளிய வைத்தது.