“நீங்களே என்னமோ பண்ணிக்குங்க” ; கடுப்பான தயாரிப்பாளர் சங்கம்


ஒவ்வொரு பட தயாரிப்பாளரும் தாங்கள் விரும்பிய தேதியில் தங்களது படங்களை ரிலீஸ் செய்ய விரும்பினால் அதற்கு முன்கூட்டியே தயாரிப்பாளர் சங்கத்தில் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும் என்கிற விதி பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் சமீபகாலமாக இதை பல தயாரிப்பு நிறுவனங்கள் மீறி வருகின்றன.

குறிப்பாக தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் போன்ற நாட்களில் தங்களது படங்களை வெளியிட பலரும் விரும்பி, தாங்களாகவே அறிவிப்பும் செய்துகொண்டு வருகிறார்கள். இதனால் வெறுத்துப்போன தயாரிப்பாளர்கள் சங்கம், இனி பண்டிகை நாட்களில் படங்களை ரிலீஸ் செய்வது அவரவர் விருப்பம் என்றும் தயாரிப்பாளர் சங்கம் அதை கட்டுப்படுத்தாது என்றும் கூறியுள்ளனர்.