யோகிபாபுவுக்கு கிடைத்த புது போஸ்டிங்


தமிழ் சினிமாவில் சந்தானம், சூரி இருவரின் ஆதிக்கம் குறைந்த நிலையில் காமெடி உலகில் புதிதாக ஒரு சூரியன் போல உருவானவர் தான் யோகிபாபு. நீண்ட நாளைக்கு பிறகு ஒருவரை திரையில் பார்த்தாலே சிரிப்புவரும் என்றால் அது யோகிபாபுவாகத்தான் இருக்கும். தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வரும் யோகிபாபு தனது படங்களில், தன்னுடைய கவுண்டர் பஞ்ச்களாலும், ஒன்லைனர்களாலும் சரவெடியை கொளுத்தி போட்டு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

பெரும்பாலான படங்களில் தனக்கான பஞ்ச் வசனங்களை தானே உருவாக்குவதுடன் இயக்குனர் கொடுக்கும் வசனங்களையும் தனக்கேற்ப மாற்றிக்கொள்கிறார் தற்போது யோகிபாபு கதாநாயகனாக நடித்து வரும் தர்ம பிரபு’ என்ற படத்தை இயக்கி வரும் இயக்குனர் முத்துக்குமரன் இதனை உணர்ந்து அந்த படத்திற்கான காமெடி வசனங்களை எழுதும் பொறுப்பை யோகிபாபுவிடம் ஒப்படைத்து விட்டாராம். எமலோலகத்தில் நடைபெறும் கதை என்பதால், அதன்மூலம் புகுந்து விளையாட வேண்டும் என தீர்மானித்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வசனம் எழுத உட்கார்ந்து விடுகிறாராம் யோகிபாபு.