கார்த்திக்கு இன்னொரு ‘பையா’வா..? ‘தேவ்’ ட்ரெய்லர் விமர்சனம்


கடைக்குட்டி சிங்கம் படத்தில் பக்கா விவசாயியாக மாறி, ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த கார்த்தி, இவரின் அடுத்த படமான ‘தேவ்’ படத்தில் சிட்டி இளைங்கனாக மாறியுள்ளார்.

கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ படம் காதலர் தினமான பிப்.14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை, நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரஜத் ரவிஷங்கர் என்ற அறிமுக இயக்குனர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

இந்த படத்தில் சாகசத்தை விரும்பும் ஒருவராக உள்ளார் கார்த்தி, இது பையா படத்தில் இருந்து சற்று வித்தியாசப்படுத்தி காட்டி இருந்தாலும், சில விஷயங்கள் அதன் சாயலில் இருப்பது போல தெரிகின்றது.

குறிப்பாக ஒரு நண்பர்கள் கூட்டம், கார்த்திக்காக அவர்கள் பெண் தேடுவது, கார்த்தி தனக்கு பிடித்த பெண்ணை பார்த்தவுடன் காதலை சொல்ல தயங்குவது, சண்டை காட்சி, உள்ளிட்ட விஷயங்கள் இரண்டு படங்களுக்கும் ஒத்து போகிறது எனவே ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான பையா படத்தை இது நினைவு படுத்துவதாக பலரும் கமெண்ட் பாக்ஸில் குறிப்பிட்டு வருகிறார்கள்.

எந்த வேலையை பண்ணும்போது பணம், புகழை தாண்டி மனசு நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கோ அதான்டா உனக்கான வேலை என்று ட்ரெய்லரில் கார்த்தி கூறுகிறார். நம்மில் எத்தனை பேர் அப்படிப்பட்ட வேலையை செய்கிறோம்?.

கார்த்திக்கு ஏற்ற ஜோடியாக தெரிகிறார் ரகுல் பிரீத் சிங். காதலை கொண்டாடும் இந்த படத்தை காதலர் தினத்தில் பார்த்து காதலர்களும் கொண்டாடுவார்கள் என்று நம்புவோமாக