அழகுக்கலை நிபுணர்களுக்கான ஒரு பிரத்யோக சங்கம். இதில் அழகுகலை நிபுணர்கள் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொள்ளலாம்.
இந்த சங்கத்தின் தலைவியாக திருமதி மீனாட்சி வெங்கடராமன் பதவி வகிக்கிறார் . செயலாளராக திருமதி இலங்கேஸ்வரி, துணை தலைவர்களாக திருமதி சித்ரா ரமேஷ் மற்றும் ஷ னாஸ் அலீம் , பொருளாளராக திருமதி பிரியா பாலாஜி, துணை செயலாளராக திருமதி பேபி மல்லிகா மற்றும் பிரபாவதி. சுஜாதா , சந்தியா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக பதவி வகிக்கின்றனர்.
இந்த சங்கம் அரசு பதிவு எண் 40/2019 என்று கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் நாள் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டது.
இந்த சங்கமானது அழகுக்கலை நிபுணர்கள் தொழில் சார்ந்த கல்வி மற்றும் துறை சார்ந்த படிப்புகளை குறைந்த கட்டணத்தில் முறையாக பயின்று அவர்கள் தொழில் மேம்பாடு மற்றும் வளர்ச்சி அடைய வழிவகை செய்யவும், அவர்களின் திறமைகளை வெளி மாநிலம் மற்றும் சர்வதேச அளவில் வெளிக்கொணரவும், வருவாய் பெருக்கவும் உறுதுணையாக நிற்கும் . பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை எளிய பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வை நடத்திட அவர்களுக்கு அழகுக்கலை சார்ந்த கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை இலவசமாக வழங்கிடவும் திட்டமிடப்பட்டுள்ளது .
அழகுக்கலை நிபுணர்கள் தொழில் சார்ந்த சவால்களை சமாளிக்க தேவையான ஆலோசனைகளையும் , பாதுகாப்பு அறனையும் சங்கம் வழங்கி அவர்களுக்கு ஒரு நிழற்குடையாக நிற்கும்.
இந்த சங்கத்தின் தொடக்கவிழா கடந்த கடந்த வாரம் 19-02-2019 செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு துறையை சார்ந்த
பிரபலங்கள் மற்றும் பெண் தொழில் முனைவோர் மூத்த அழகுக்கலை நிபுணர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அழகுக்கலை நிபுணர்கள் ஒற்றுமையுடனும் ஒருமைப்பாட்டுடனும் நின்று செயல்பட்டு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்ற உயரிய குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டதே இந்த சங்கம்.