ரஜினியிடமே வாலாட்டும் நயன்தாரா

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

ஆனால் அவர் இப்படத்தில் ரஜினியின் ஜோடி இல்லையாம். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லையாம். தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்ட இப்படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிப்பார் எனவும் மேலும் நயன்தாரா இப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக அல்லது ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இப்படத்துக்காக தொடர்ச்சியாக அறுபது நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். ரஜினியை எதிர்த்தாலும் படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கு என்ன முடிவு ஏற்பட்டதோ அதேதான் நயன்தாராவுக்கும் ஏற்படும் என்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். ஏற்கனவே சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினி – நயன்தாரா ஜோடி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.