“எனக்கும் நேரம் வரும்.. காத்திருந்து பாருங்கள்” ; பொங்கிய சிவகார்த்திகேயன்


சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்க கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கும் படம் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா”. ஷபீர் இசையத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரை பிரபலங்கள், படக்குழுவினர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.

இந்த விழாவில் சிவகர்த்திகேயன் பேசும்போது, “என்னோட கடந்த படம் சரியா போகல, ஆனால் அடுத்தடுத்த படங்கள் அப்படி இருக்காது, நல்ல படங்களாக இருக்கும். வெற்றி பெறும்போது அணியாக தெரியும், தோற்கும்போது தனியா இருப்பது போல தெரியும். ஆனாலும் அப்போதும் கூட நிற்பது ரசிகர்களாகிய நீங்கள் தான்

ஆனா தோற்கிறதோ தனியா நிற்கிறதோ பிரச்சனையல்ல. நிற்கிறோம்கிறது தான் பிரச்சனை. நான் நிற்கிறேன். கடைசி படம் சரியாக போல. ஆனா அடுத்தடுத்த படங்கள் இப்படி இருக்காது. இதெல்லாம் ஒரு விளையாட்டு தான். ஒரு மேட்சுல அவுட்டாயிட்டோம் தோத்துட்டோம் அப்படினா அந்த மேட்ச் தான் முடியும், லைஃப் முடியாது.

நான் கடைசியா பண்ண படம் என்னுடைய தயாரிப்பாளருக்கு லாபகரமான படம் தான். அது பற்றி பேச வேண்டாம். இனி நான் நடிக்கும் படங்கள் என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படமாகத்தான் இருக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா” என்று தனது பட டைட்டிலை வைத்தே சூளுரை செய்தார் சிவகார்த்திகேயன்.