தலைவர் 168 படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிக்கும் ஜோதிகா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படக்குழுவினர் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தலைவர் 168 படத்தைப் பற்றி தினமும் அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளன. சன்பிக்சர்ஸ் தயாரிப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தலைவர் 168 படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே ஜோதிகா மெஹாஹிட் படமான சந்திரமுகி படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் மூலம் மீண்டும் சூப்பர்ஸ்டாருடன் நடிக்க வாய்ப்பு உருவாகி உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தலைவர் 168 படமானது ஆக்சன் கலந்த படமாக இருக்குமென்றும், குடும்பங்கள் மற்றும் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் இருக்கும் என்றும் இயக்குநர் சிவா தெரிவித்துள்ளார்.