தமிழ்த்திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நாயகியாக வலம் வரும் காஜலுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காஜலுக்கும், தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதை காஜலுக்கும் நெருக்கமானவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.