ரசிகைக்கு வளைகாப்பு நடத்திய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !


சூப்பர்ஸ்டாருக்கு கோடிக்கணக்கான தீவிர ரசிகர்கள் உள்ளனர். இதில் சென்னையைச் சேர்ந்த ராகவா விக்னேஷ்-ஜெகதீஸ்வரி தம்பதியரும் சூப்பர்ஸ்டாரின் தீவிர ரசிகர்கள் ஆவர்.

ஜெகதீஸ்வரி கர்ப்பமாக இருந்து உள்ளார். கர்ப்பமாக இருந்த மனைவியின் ஆசை என்ன என்று கணவர் ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு சூப்பர்ஸ்டாரை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெகதீஸ்வரி.

மனைவியின் ஆசையை நிறைவேற்ற 4-வது மாதம் முதலே சூப்பர்ஸ்டாரை பார்ப்பதற்கு நேரம் கேட்க ராகவா விக்னேஷ் முயன்றுள்ளார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய படப்பிடிப்பு நடந்து வரும் தளத்துக்கு தம்பதியரை வரவழைத்து சந்தித்துள்ளார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரிக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.