ரஜினியின் தர்பார் பட பாடல் ”டும் டும்” புரோமோ வீடியோ யூடியூப்பில் வைரல்!


ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வர உள்ள படம் தர்பார். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி போன்றோர் நடித்துள்ளனர். மும்பையை மையமாகக் கொண்ட இப்படத்தில் சூப்பர்ஸ்டார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகி உள்ளது.

படத்தின் டைட்டில் சாங்கான “சும்மா கிழி” ஏற்கனவே யூடியூப்பில் சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் மற்றொரு பாடலான “டும் டும்” என்ற பாடலின் புரோமோ வீடியோ யூடியூப்பில் செம வைரலாகி வருகிறது. இப்பாடலில் சூப்பர்ஸ்டாரின் டான்ஸ் அனைவர் கவனத்தையும் கவர்ந்துள்ளது. ஏற்கனவே தனது காந்த சக்தியால் பல கோடி ரசிகர்களைப் பெற்றுள்ள சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த நடனத்தின் மூலம் அனைவரையும் ஈர்த்துள்ளார்.