லீக் ஆன விஜய்யின் புதிய தோற்றம் – சமூக வலைதளங்களில் வைரல்!


பிகில் வெற்றிப் படத்தைத் தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் விஜய் பேராசிரியராக நடிப்பதாகவும், அதனாலேயே படத்திற்கு மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக விஜய் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார் எனவும் தகவல் கசிந்த நிலையில் புதிய தோற்றத்தில் உள்ள விஜய்யின் புகைப்படம் வெளிவந்துள்ளது. இத்திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். விஜய் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

மாஸ்டர் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9 -ந்தேதி வெளியாகலாம் என தெரிகிறது. தொடர்ந்து 4, 5 நாட்கள் விடுமுறை வருவதால் இந்த தேதியில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.