1.8 கோடிக்கு விலைபோன ஜெய் நடிக்கும் புதிய படம்!


ஜெய் தற்போது ‘பிரேக்கிங் நியூஸ்’ என்கிற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இதுவரை காமெடி கதாபாத்திரங்கள் மற்றும் சென்டிமென்ட் கதாபாத்திரங்களில் நாயகனாக நடித்து வந்த ஜெய் தற்போது இந்த படத்தில் வித்தியாசமான ஒரு சூப்பர் ஹீரோ வேடத்தில் நடித்து வருகிறார்.
கிட்டதட்ட 400 தொழில் நுட்ப கலைஞர்கள் தினேஷ் குமார் மேற்பார்வையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிளை வடிவமைத்து வருகிறார்கள்.

இதில் ஜெய்யுடன் பானு ஶ்ரீ, பழ கருப்பையா, இந்திரஜா, மானஸ்வி, ராகுல் தேவ், தேவ் கில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

ஜெய் நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தின் ஹிந்துஸ்தான் 1.8 கோடி ரூபாய்க்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. சமீபகாலமாக தமிழ்ப்படங்களின் ஹிந்தி ரைட்ஸ் உரிமையை வாங்கி ரீமேக் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வது அதிகமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் படம் உருவாகி கொண்டிருக்கும் போதே இவ்வளவு தொகைக்கு விலை போனது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.