நாயகன் அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவருடன் இணைந்து பணியாற்றுபவர்கள் நாயகி பிரியா பவானி சங்கர் மற்றுமொரு இளைஞர்.
இந்த குழுவினர் தலைநகர் சென்னையின் பல இடங்களில் சோதனை நடத்துகின்றனர். அப்போது கல்லூரி மாணவர்களிடம் இருக்கும் போதைப் பழக்கத்தை கண்டறிகிறார் நாயகன் அருண் விஜய். இதற்கு காரணமானவர்களை தேடுகிறார் நாயகன் அருண் விஜய். ஆனால் இது சம்பந்தமாக சின்ன சின்ன ஆட்களை மட்டுமே கண்டறிய முடிகிறது. அருண் விஜயால் பெரும்புள்ளிகள் நெருங்க முடியவில்லை.
இந்த சூழலில் போதைமருந்து தடுப்பு பிரிவில் பணியாற்றும் அருண்விஜயின் உயர் அதிகாரி ஒருவரும், அருண் விஜய்க்கு பல தகவல்களை தந்து உதவிய சமூக ஆர்வலரும் கொல்லப்படுகின்றனர்.
அதன்பிறகு தனது தேடலை எழுத படுத்துகிறார் நாயகன் அருண் விஜய். போதை மருந்துக்கு காரணமான மாபியா கும்பலின் பெரும் புள்ளியை கண்டுபிடித்தாரா? போதை மருந்தை ஒழித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
போதை மருந்து தடுப்பு பிரிவு அதிகாரியாக நாயகன் அருண்விஜய் கன கச்சிதமாக நடித்துள்ளார். தனது உடல் மொழியால் ரசிகர்களை கவருகிறார்.
நாயகி பிரியா பவானி சங்கர் காதல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் மட்டும் அல்லாது ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்துள்ளார்.
வில்லனாக நடிகர் பிரசன்னா மிகவும் ஸ்டைலாக நடித்துள்ளார். இயக்குனர் கார்த்திக் நரேன் இரண்டாம் பாதியை போல் முதல் பாதையையும் விருவிருப்பாக எடுத்திருந்தால் இன்னும் படத்தை சற்று அதிகமாக ரசித்திருக்கலாம்.
மொத்தத்தில் “மாஃபியா” சற்று வேகம் குறைவு.