சூர்யா- ஹரி காம்போவில் உருவான வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘அருவா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார். இதன்மூலம் சூர்யா படத்திற்கு அவர் முதன்முறையாக இசையமைக்க உள்ளார். ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். அருவா திரைப்படம் இந்தாண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.