முதல் முறையாக கமலுடன் இணைகிறார் அனுஷ்கா?


கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் 2. ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் இத்திரைப்படம் கிரேன் சரிந்து விழுந்த காரணத்தினால் படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டது. தற்போது கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பட வேலைகள் தடைப்பட்டு உள்ளன.

அடுத்ததாக கமல் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் அனுஷ்கா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கமல் காவல்துறை அதிகாரியாக நடித்து மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வேட்டையாடு விளையாடு. கௌதம் மேனன் இயக்கிய இத் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. இத்திரைப்படத்தில் வான் அனுஷ்கா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனுஷ்கா ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அஜீத் விஜய் விக்ரம் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.