ஏ 1‘ படத்தின் வெற்றியை இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 12-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தநிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர் படக்குழுவினர்.
பத்திரிகையாளர் சந்திப்பு முடியும்வரை படத்தின் இயக்குனர் ஜான்சன் வரவே இல்லை. சந்தானம் கூட கோவையிலி இருந்து காலையில் பிளைட் பிடித்து கிளம்பி நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். ஆனால் சென்னையிலேயே இருந்த ஜான்சன் வேறு எங்கோ விழாவில் கலந்துகொண்டு இருப்பதாகவும் அங்கிருந்து வர தாமதமாகிறது என்றும் சந்தானம் கொஞ்ச நேரம் சமாளித்தார்.
கொஞ்ச நேரம் கழித்து, அவர் வந்த கார் விபத்தில் சிக்கிவிட்டது. அதனால் அவர் வருவதற்கு லேட்டாகும் என கூறினார்கள். பிரஸ்மீட் முடிந்து பலரும் எழுந்து செல்ல ஆரம்பித்த நிலையில் ஒரு வழியாக வந்து சேர்ந்தார் இயக்குனர் ஜான்சன். ஆனால் மனிதர் செம போதையில் இருந்தார்.
மைக் பிடித்து பேசும்போது கூட, ‘நான்லாம் ஒர்த்தே இல்ல’ என அடிக்கடி ஒரே வார்த்தையை திரும்பத்திரும்ப கூறினார். சந்தானம் அவரை சரிக்கட்டி அமரவைத்தார். ஒரு படத்தின் இயக்குனரே தனது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு மது அருந்திவிட்டு தள்ளாட்டத்துடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது..