ஆட்கள் தேவை – விமர்சனம்

ஒரு பெண்ணை ஒரு கும்பல் கடத்தி அவளுக்கு போதை ஏற்றி அவளை சீரழிக்கின்றனர்.இந்த கும்பல் தலைவன் ஈசனுக்கு பக்க பலமாக இருக்கிறார் அரசியல்வாதி மைம் கோபி.

ஹீரோ சக்தி சிவன் & ஹீரோயின் சந்திரலேகா இருவரும் காதலிக்கின்றனர். அவர்கள் விரைவில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய காத்திருக்கும் நிலையில் சந்திரலேகாவை அதே கும்பல் கடத்தி விடுகிறது.

ஹீரோ சக்தி சிவன் காதலியை மீட்டாரா? என்பது படத்தின் மீதிக் கதை.

இயக்குனர் & நாயகன் இருவரும் ஒருவரே. நாயகி சந்திரலேகா மிகையில்லாத நடிப்பு. காதலிலும் சரி கடத்தலிலும் சரி அந்த காட்சிகள் இவருக்கு கை கொடுத்துள்ளன.வில்லன் ஈசன் மற்றும் அரசியல்வாதி தம் கோபி இருவரும் கச்சிதம். மற்றொரு வில்லன் ஆமோஸ் ஜாக் என்பவரும் நம் கவனத்தை ஈர்க்கிறார்..

கார்த்திக் ராஜாவின் இசையில் ஒரு முறை கேட்கும் ரக பாடல்கள்.சுரேஷ்குமாரின் ஒளிப்பதிவு ஓகே.

கையில் எடுத்த கதையை இன்னமும் சுவாரஸ்யமாக சொல்லும் விதத்தில் தடுமாறிவிட்டார். காமெடி கலந்து சொல்லியிருந்தால் கூட எடுப்பட்டிருக்கும்.

மற்றபடி… பெண்களை அவர்கள் அனுமதியில்லாமல் தொடுவது குற்றம். அதற்கு கடுமையான தண்டனை வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார் டைரக்டர் சக்தி சிவன். எனவே அவரை வெகுவாக பாராட்டலாம்.