அகத்தியா ; விமர்சனம்


சினிமாவில் ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜீவா, புதிய படத்தின் படப்பிடிப்புக்காக ரூ.6 லட்சம் செலவழித்து அரண்மனை செட் போடுகிறார். செட் வேலை முடிந்த நிலையில் அந்தப் படம் நின்றுவிடுகிறது.,

செட்டுக்காக போட்ட பணத்தை திரும்ப காதலி ராசி கண்ணாவின் ஆலோசனைப்படி எடுக்க அந்த செட்டை திகில் பங்களா வடிவில் மாற்றியமைத்து அதில் பார்வையாளர்கள் மூலம் வசூல் செய்கிறார்கள். கூடவே பிரச்சனையும் வந்து சேர்கிறது.

அந்த செட்டில், ஏற்கெனவே, பழங்கால பியானோ ஒன்று கிடக்கிறது. அதை வாசிக்கத் துவங்க, நிஜமாகவே பேய்கள வெளிவரத்துவங்குகின்றன. அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

நாயகனாக இருந்தாலும் முதல் பாதியில் ஜீவாவுக்கு பெரிய வேலை இல்லை. ஆனால் எதிர்பாராத சர்ப்ரைஸாக வரும் இரண்டாவது வேடத்தில் அசத்தியிருக்கிறார்.

நாயகி ராசி கண்ணாவிற்கு ஜீவாவுடன் வந்து போகும் பாத்திரம். காதலைத் தாண்டி நட்பு முன்னிற்கும் இடங்கள் அத்தனையும் கவிதை. இன்னொரு நாயகியாகன மாடில்டாவுக்கு கனமான கதாபாத்திரம்.. அதை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.

மேற்கத்திய உடையணிந்த சித்த மருத்துவர் சித்தார்த்தனாக அர்ஜுன் நடித்திருக்கிறார். அவரது அனுபவ நடிப்பும், திரை இருப்பும் படத்துக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

சாரா,இந்துஜா,ரோகினி,செந்தில்,பூர்ணிமா பாக்யராஜ், யோகிபாபு, விடிவி கணேஷ் உட்பட படத்தில் நிறைய நடிகர்கள்.எல்லோரையும் அளவாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதேபோல் ஒளிப்பதிவு, இசை, கிராபிக்ஸ் காட்சிகள், கிளைமாக்ஸ் என அனைத்துமே படத்திற்கு மிகப்பெரும் பிளஸ் ஆக இருக்கிறது.

சித்த மருத்துவ சிறப்பை சொல்வ சொல்வதற்கு எடுத்துக் கொண்ட கதைக் களத்தில் ஒரு இனிய காதல், நட்பு துரோகம், தாய்ப் பாசம் ஆகியவற்றையும் இணைத்து சொன்ன விதத்தில் தேர்ந்த இயக்குனராகவும் தடம் பதிக்கிறார் பா. விஜய் இளைய தலைமுறையினரும் பார்த்து ரசிக்கத் தக்க விதத்தில் காமெடி, திகில், ஃபேண்டஸி, அம்மா செண்டிமெண்ட், சுவாரஸ்யம், விறுவிறுப்பு கலந்து படத்தை நகர்த்திச் செல்வதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் பா.விஜய்.கலந்து