கிராமத்தில் நல்லதொரு பெயர் எடுத்து வைத்திருப்பவர் ஹாலாசியம் என்பவர். ஒருநாள், வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது இறந்து விடுகிறார் ஹாலாசியம். உயிர் மூச்சு நின்ற பிறகும் உயிர்நாடி ‘அடங்காமல்’ நிற்கிறது”. அவரது உடலை வெளியே காட்ட முடியாத பிரச்சினை எழுகிறது.
இதனால் இதை ஒரு பெரிய அவமானமாக கருதி, இந்த சூழ்நிலையை தங்கள் உறவினர்களிடமிருந்து, கிராம மக்களிடமிருந்தும் மறைக்க அவர்கள் போராடுகிறார்கள். மேலும், அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை ஒரே நேரத்தில் செய்ய அவர்கள் தயாராகிறார்கள். இறுதியில் எப்படி பிரச்சனையை சமாளித்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்வதே ’பெருசு’.
வைபவ், எப்போதும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில், சில காட்சிகளில் மிகையான நடிப்பினை கொடுத்திருந்தாலும், கச்சிதமாக நடித்திருக்கிறார்.
வீட்டின் மூத்த பிள்ளை கதாபாத்திரத்திரல், பல பொறுப்புகளை கவனிக்கும் சுனில், கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், வைபவின் மனைவியாக நடித்திருக்கும் நிஹாரிகா, மேடை நாடக கலைஞர் போல் செயற்கைத்தனமாக நடித்திருக்கிறார்.
பாலசரவணன், முனீஷ்காந்த் ஆகியோரது கூட்டணி, சிரிக்க வைக்கிறது தனம், தீபா, கஜராஜ், சாமிநாதன், கருணாகரன், கஜராஜ் உள்ளிட்ட நடிகர்களும் தங்களது பங்களிப்பினை அளவாக கொடுத்து காட்சிகளை ரசிக்கும்படியாக கொடுத்திருந்தனர்.
எழுதி இயக்கியிருக்கும் இளங்கோ ராம், முகம் சுழிக்கும் ஒரு விசயத்தை எந்த ஒரு நெருடல் நெருட இல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்திச் சென்றிருக்கிறார்.படத்திற்கு ஏ சர்டிபிகேட் பெரியவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்பதால் நமக்கு சிறிய ஆறுதல் என்றாலும் பெண்கள் எப்படி இந்த படத்தை பார்ப்பார்கள் என்பது இயக்குனருக்கே வெளிச்சம்.