இசையமைப்பாளர் ஹிரோவாகும் காலம் போல இது, நான் படத்தின் சூப்பர் ஹிட்டுக்கு பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம்தான் சலீம். நான் படத்தின் இரண்டாம் பாகம் என்ற பேச்சு அடிப்பட்டாலும் இது நான் படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்று படத்தின் இயக்குநரும், விஜய் ஆண்டனியும் மறுத்து வருகின்றனர். சென்ற மாதமே திரைக்கு வரவேண்டிய சலீம் திரைப்படம் இந்த மாதம் ஆகஸ்ட் 29 திரைக்கு வருகிறது.
இந்நிலையில் சலீம் படம் திரைக்கு வருவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சலீம் படத்தை முதலில் தயாரித்துக் கொண்டிருந்தது மாசாணி படத்தை இயக்கிய தயாரிப்பாளர்தான் இடையில் ஸ்டுடியோ 9 நிறுவனம் நுழைந்து ஒரு சிறிய தொகையை மாசாணி தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட்டு சலீம் படத்தை வாங்கிவிட்டனர். ஆனால் தற்போது சலீம் படம் விஸ்வரூபம் போல பெரிய படமாக உருவாகியிருப்பதால் மீண்டும் மாசாணி தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 நிறுவனத்திடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறாராம். என்னுடைய சலீம் படத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள் நீங்க கொடுத்த பணத்தை திருப்பி தந்துவிடுகிறேன் என்பதுதான் அந்த தயாரிப்பாளரின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் சற்றும் மசியாமல் தயாரிப்பாளரை ஓரம்கட்டிவிட்டு சலீம் ரிலீசுக்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்களாம் ஸ்டுடியோ 9 நிறுவனம். இதனால் மாசாணி தயாரிப்பாளர் கோர்ட்டில் மனு போட்டு படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறாராம்.