இந்திப்படத்தில் தான் நடித்த காலத்திலி இருந்தே தன்னை மிகப்பெரிய அப்பாடக்கர் என நினைத்துக்கொண்டு இருப்பவர் இலியானா. டம்மி ஹீரோக்களுடன் இந்தியில் நடிப்பதற்காக தெலுங்கு ஹீரோக்களை ஒதுக்கிய இலியானாவை ஆந்திர திரையுலகம் எப்போதோ ஒதுக்கி வைத்துவிட்டது.. இப்போது போனால் போகிறது என்கிற ரீதியில் ‘ஆன்கேன்-2’ என்கிற படத்தில் நடிக்க இலியானவுக்கு வாய்ப்பு கிடைத்தது…
ஆனால் அதனையும் தனது வாயால் கெடுத்துக்கொண்டார் இலியானா. காரணம் அந்தப்படத்தின் தயாரிப்பாளர் தன பெயரை பயன்படுத்தியே அனைவரிடமும் பிசினஸ் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர் மெது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஆனால் இந்தப்படத்தில் அமிதாப் பச்சன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்ட நான்கு ஜாம்பவான் நடிகர்கள் இருக்கும்போது இலியானாவை வைத்து புரமோட் பண்ணும் அளவுக்கு தான் தரம் தாழ்ந்து போய்விடவும் இல்லை.. அமிதாப்புக்கான மவுசும் குறைந்துபோய்விடவில்லை.. அதனால் என் படத்திற்கு இலியானா தேவையும் இல்லை என காட்டமாக பதிலடி கொடுத்துள்ளாராம் அந்த தயாரிப்பாளர்.
Illeana threatened bollywood producer..?