மூன்றெழுத்து வாரிசு நடிகர் நடித்த படங்கள் எல்லாம் படப்பிடிப்பை முடித்து, ரிலீஸாகி தியேட்டருக்கு வருவது என்பதே ஒரு திருவிழா மாதிரித்தான்.. காரணம் அவர் ஒரு படத்தில் நடித்தால் அந்தப்படம் முடிய குறைந்தது மூன்று வருடங்களாவது ஆகும் என்பது ஊரறிந்த செய்தி.. அப்படியே பட வேலைகள் முடிந்துவிட்டாலும் கூட கூட ரிலீஸ் தேதியை மாற்றி மாற்றி அறிவித்து அதிலும் சாதனைகள் படைத்து வருகிறார்.
இந்த நிலையிலும் கூட அவரை அவரை வைத்து படம் தயாரிக்கவும் இயக்கவும் ஆட்கள் வருகிறார்கள் என்றால் அது அவரது தந்தை செய்த புண்ணியம் தான். இந்த நிலையில் ஏற்கனவே இசையமைப்பாளரை வைத்து இது இல்லேன்னா அது என்கிற பெயரில் பிட்டு பட ரேஞ்சில் படம் இயக்கிய இயக்குனரின் இயக்கத்தில் நடித்த் வருகிறார் வாரிசு நடிகர்..
இந்தப்படம் எப்போது ரிலீஸ் ஆகும், இல்லை வருமா வராதா என்பதை எல்லாம் அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான். இப்போது விஷயம் என்வென்றால் இந்தப்படத்தில் மூன்று கெட்டப்பில் நடிக்கிறாராம் வாரிசு நடிகர்.. இந்த மூன்று கெட்டப்புகளில் ஒவ்வொரு கெட்டப்பின் படப்பிடிப்பும் முடியும்போதும் அதற்கான பர்ஸ்ட் லுக்கையும் டீசரையும் வெளியிட திட்டம் வைத்துள்ளாராம் வாரிசு நடிகர்..
நடிச்ச படம் வெளியாகிற வழியை காணோம்.. ஆனால் இந்த அலப்பரைக்கெல்லாம் கொஞ்சமும் குறைச்சலில்லை ஏன முணுமுணுக்கிறார்களாம் படக்குழுவினர்.. சந்திரமுகி படத்தில் சூப்பர்ஸ்டார் சொல்வாரே, ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கில்லையாம்.. அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி கேட்டுச்சாம்.. அந்த கதையாவுல இருக்கு என திரையுலகத்தை சேர்ந்து சிலர் தங்களுக்குள் பேசி நகைத்துக்கொள்வதையும் காண முடிகிறது.