இன்று ரிலீஸான கபாலி படத்தை பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து பார்த்துவிட்டு திரும்பிச்செல்வதற்காகவே பெங்களூரு ரசிகர்களுக்கு சிறப்பு விமானம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது ஏர் ஆசியா நிறுவனம்..
இந்த நிறுவனம் ‘கபாலி’ படத்தின் அதிகாரப்பூர்வ விளம்பர பங்குதாரர்களில் ஒன்று ஒரு டிக்கெட்டின் விலை 7860 ரூபாய் மட்டுமே.. அதாவது காலை 6.10 மணிக்கு பெங்களூரில் கிளம்பும் இந்த சிறப்பு விமானம் காலை 7.10 மணிக்கு சென்னையை வந்தடையும். பின்னர் பிற்பகல் 3 மணிக்கு கிளம்பி மாலை 4 மணிக்கு பெங்களூரை சென்றடை.வதாகத்தான் இதன் பிளான்..
பெங்களூரு ரசிகர்கள் சென்னையில் இறங்கியது முதல் காலை, மதிய உணவு, ஏர்போர்ட்டில் இருந்து தியேட்டருக்கு வந்து, திரும்பிச்செல்லும் வாகன வசதி, முதல் காட்சிக்கான தியேட்டர் டிக்கெட், தியேட்டரில் ஸ்நாக்ஸ், கூல்ட்ரிங்க்ஸ் என எல்லாமே இந்த தொகைக்குள் அடங்கிவிடும். அனைவருக்கும் சத்யம் தியேட்டரில் தான் படம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதேபோல திட்டமிட்டபடி பெங்களூரு ரசிகர்கள் சென்னை வந்துவிட்டாலும், அவர்கள் அனைவருக்கும் சத்யம் தியேட்டரில் குறிப்பிட்ட காட்சிக்கு சீட்டுகள் கிடைக்கவில்லை. அதனால் ஏர் ஆசியா நிறுவனம் திடீர் ஏற்பாடாக அவர்கள் அனைவரையும் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் உள்ள பிரிவியூ தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.. ஆனால் பல ரசிகர்கள் எங்களுக்கு சத்யம் தியேட்டர் தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்களாம்..
அதனால் பாதி பேரை பிரசாத் லேப் தியேட்டரில் படம் பார்க்க வைத்துவிட்டு, மீதிப்பேரை சத்யம் தியேட்டருக்கு அழைத்து சென்றார்களாம். ஏப்படியோ அங்கிருந்த மேனேஜரிடம் பேசி சரிக்கட்டி வி.ஐ.பிகளுக்காக மீதம் இருந்த இருக்கைகளை வாங்கி கொடுத்து படம் பார்க்க வைத்தார்களாம். பின்னர் பிரசாத் லேபில் படம் பார்த்தவர்களையும் சத்யம் தியேட்டரில் படம் பாத்தவர்களையும் ஒன்றிணைத்து ஒருவழியாக பெங்களூருக்கு பிளைட் ஏற்றி அனுப்பினார்களாம்.
சத்யம் தியேட்டரில் படம் பார்க்கவைக்கும் சாதாரண விஷயத்தில் கூட ஏர் ஆசியா நிறுவனம் கோட்டை விட்டு இன்று வந்த ரசிகர்களிடம் வாங்கிக்கட்டி கொண்டதுதான் மிச்சம்.