ரஜினிக்கு ஜோடியாக அமலாபால் ; கிளம்பியது முதல் பூதம்..!


ஒருபக்கம் ‘கபாலி’ படத்தை பற்றிய செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்து வருகின்றன.. ரஜினியின் இன்னொரு படமான ‘2.O’ பற்றியும் பரபரப்பான செய்திகள் எதுவும் இல்லை.. அதனால் ரஜினி பற்றிய செய்திகளை லைம்லைட்டிலேயே வைத்திருக்க தனுஷ் செய்த யுக்தி தான் சூப்பர்ஸ்டாரின் புதிய பட அறிவிப்பாக வெளியாகி இருக்கிறது.

இனி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்தப்படத்தை பற்றிய செய்திகள், யூகங்கள் புதிது புதிதாக கிளம்பும் அல்லவா..? கிளப்பி விடுவார்கள் அல்லவா..? அப்படி இந்தப்பட அறிவிப்பு வெளியானதுமே ஈவு இரக்கமில்லாமல் கிளம்பியிருக்கும் முதல் பூதம், ரஜினிக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார் என்பதுதான்..

அதற்கு காரணத்தையும் கோடிட்டு காட்டுகிறார்களாம் சிலர்… வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபின்னர் தனுஷின் நெருங்கிய நட்பு வளையத்தில் அமலாபால் இடம் பிடித்துவிட்டாராம். அதனால் தான் அவர் தயாரித்த அம்மா கணக்கு, அவர் நடிக்கும் ‘வட சென்னை’ ஆகிய படங்களில் அமலாபாலுக்கு தொடர்ந்து வாய்ப்பு தரப்பட்டு வந்ததாம்..

அந்தவகையில் சினிமாவிற்காக தனது கணவரையே பிரிந்துவந்த அமலாபாலுக்கு தனது சினிமா வாழ்க்கையின் உச்ச பட்ச இலக்காக ரஜினிக்கு ஜோடியாக நடித்துவிடவேண்டும் என்கிற ஆசையும் இருக்கத்தானே செய்யும்.. அதற்கு செயல் வடிவம் கொடுக்கவும் தனுஷ் அமலாபாலுக்கு வாக்களித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது..

யாரோ ஒரு ராதிகா ஆப்தேவுக்கு ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது, அமலாபாலுக்கு கிடைக்க கூடாதா என்ன என தனுஷ் நினைப்பது நியாயம் தான் என்றாலும் அமலாபாலை எல்லாம் ரஜினிக்கு ஜோடியாக பார்க்கவேண்டிய கொடுமையையும் ரசிகர்கள் சந்திக்கத்தான் வேண்டும்போல..!