ஒரு தமிழ்ப்படம் ரிலீஸுக்கு முன்பே இந்த அளவு எதிர்பார்ப்பை கிளப்புவதும், ரிலீஸுக்கு முன்பே கோடிகளை அள்ளி வருவதும் நிச்சயம் நமக்கு புதிதுதான்… ஆனாலும் அதை சாதித்திருப்பது நம்முடைய சூப்பர்ஸ்டார் நடித்த ‘கபாலி’ என்பதால் தலைவரால் மட்டுமே இது முடியும் என ஒவ்வொரு ரஜினி ரசிகனும் பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறான்.
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, தமிழின் பெருமையை, தமிழ் சினிமாவின் பெருமையை உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு பரப்பும் தூதுதவனாகவே ரஜினியும் அவரது படங்களும் இருந்து வந்திருக்கின்றன.. ஆனால் இந்தமுறை கபாலியின் வீச்சு ரொம்பவே அதிகம்..
சுமார் 50 நாடுகளில் மொத்தம் ஐயாயிரம் திரையரங்குகளுக்கு மேல் கபாலி ரிலீஸ் ஆகிறது என்பது இனி ரஜினியால் மட்டுமே முறியடிக்க முடிகிற சாதனை.. அமெரிக்காவில் உள்ள ரெக்ஸ் திரையரங்கில் முதன்முதலாக ஒரு இந்தியப்படம் வெளியாகிறது என்றால் அது நம் தமிழ்சினிமாவின் மாவீரன் ‘கபாலி’ ஏற்படுத்தி தந்த பெருமை அல்லவா..?
நேற்றுத்தான் இந்தப்படத்தின் புக்கிங்கை திறந்துவிட்டார்கள்.. ஆனால் சில மணி நேரங்களிலேயே சுமார் பத்து நாளைக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இன்னும் பல சாதனைகளை படைத்துக்கொண்டே வருகிறது.. தவழும் குழந்தை முதல் தடியூன்றி நடக்கின்ற கிழவர் வரை அனைவரையும் தனது தரிசனத்தால் திருப்திப்படுத்த ஒரேயொரு நபரால் மட்டுமே முடியும் என்றால்…
அதுதான் ரஜினி..
அதுதான் கபாலி..
கபாலி கவுன்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்.