விஜயகாந்த் நடிக்க மறுத்த கதையில் தனுஷ் நடித்த ஆச்சர்யம்..!


டைட்டிலை படித்ததுமே இது என்னடா போங்கு ஆட்டமா இருக்கொமொன்னு டவுட் வரத்தான் செய்யும்.. ஆனால் டீடெய்ல் இருக்குது பாஸ்.. இப்ப தனுஷ் நடிச்சிருக்கிற தொடரி படத்தோட கதையை பல வருஷங்களுக்கு முன்னாடியே விஜயகாந்த் கிட்ட ஒருத்தர் சொன்னார்.. ஆனால் விஜயகாந்த் நடிக்க மறுத்து அவரை திருப்பி அனுப்பிட்டார்.

இதுக்கு வீடியோ வடிவத்திலே சாட்சியே இருக்குங்க.. நீங்க நம்பலைன்னா ராம்கி-விவேக் நடிச்ச ‘விஸ்வநாதன்-ராமமூர்த்தி’ படத்துல விவேக் காமெடின்னு தேடிப்பாருங்க. அந்த லிஸ்ட்ல, அந்தப்படத்துல கெஸ்ட் ரோல்ல நடிகர் விஜயகாந்த்தாவே நடிச்சிருந்த நம்ம கேப்டன் கிட்ட சினிமாவுக்கு கதை எழுதிக்கிட்டிருக்கிற விவேக் கதை சொல்ற வீடியோ ஒண்ணு இருக்கும்..

அதுல, விஜயகாந்த்துக்கு தான் தயார் பண்ணி வச்சிருக்கிற கதையை சொல்வார் விவேக்.. கதைப்படி, பிரேக் பிடிக்காம ஓடுற ட்ரெய்னை, அதவிவிட பாஸ்ட்டா ஓடிப்போய் விஜயகாந்த் தடுத்து நிறுத்தனும்னு சொல்வார்.. அதுமட்டுமல, கதைப்படி க்ளைமாக்ஸ்ல ஹைகோர்ட் சுவத்தை உடைச்சிக்கிட்டு ட்ரெய்ன் வந்து நிற்கும்னு சொல்லிருப்பார்..

இப்ப தனுஷ் நடிச்சிருக்கிற தொடரி படத்துலேயும் பிரேக் பிடிக்காத ட்ரெய்னை தனுஷ் தானே நிறுத்த முயற்சி பண்றார். அதுமட்டுமில்லாம அந்த ட்ரெய்ன் கடைசில சென்ட்ரல் ஸ்டேஷன் சுவத்துல மோதித்தானே நிற்குது. இதையெல்லாம் வச்சு பார்க்கும்போது அன்னிக்கு விஜயகாந்துக்கு விவேக் காமெடியா சொன்ன கதையை பிரபுசாலமன், கொஞ்சம் உல்டா பண்ணி தனுஷை வச்சு படமா எடுத்துட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *