கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேஸி மோகனின் வசனங்களை கவனித்து பார்த்திருக்கிறீர்களா..? அவரது வசனங்களில் ஒரு நபர் முதல் கேள்வி கேட்டு, அடுத்தவர் பதில் சொல்வதற்குள் இரண்டாவது கேள்வியையும் வேகமாக கேட்டு விடுவார்.. ஆனால் இரண்டாவது நபர் பதில் சொல்லும்போது அது இரண்டாவது கேள்விக்கு பதிலாக அமைந்துவிடும்.. அது நமக்கும் சிரிப்பை வரவழைத்துவிடும்..
அவ்வளவு ஏன்..? வாட்ஸ் ஆப்பில் நீங்கள் மெதுவாகவும் உங்களுடன் சாட் செய்யும் நபர் வேகமாகவும் கேள்விகளை கேட்டு பதில் சொல்லும்போதே இந்த தமாஷ் நடப்பதை காணமுடியும். இதேபோலத்தான் நடிகர் தனுஷ் வெளியிட்ட வாழ்த்து செய்தி ஒன்று வேறுவிதமாக திரிக்கப்பட்டு சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.. விஷயம் இதுதான்… ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு விலங்குகள் நல தூதாராக பதவி வழங்கப்பட்டதல்லவா.? அன்றைய தினமே சௌந்தர்யா தான் தனது கணவருடன் பிரிந்து வாழ்வதாகவும் டிவிட்டரில் பதிவிட்டார்..
தனது அலுவல்களை எல்லாம் முடித்துக்கொண்டு வந்த தனுஷ் இதன் பின்னர் சௌந்தர்யாவுக்கு வாழ்த்துக்கள் என ட்வீட் பண்ணினார்.. இதை பார்த்தவர்கள் பெரும்பாலும் அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்ததற்காக வாழ்த்து சொல்கிறார் என நினைத்து அதைவைத்து தங்களது பரப்புரையை ஆரம்பித்துவிட்டார்கள்..