திரைப்பட விழாக்களில் தான் பல சுவாரஸ்யமான விஷயங்களை திரையுலக பிரபலங்கள் தாங்களாகவே கொட்டுவார்கள். அந்தவகையில் இன்று நடைபெற்ற ‘குற்றம் 23’ படத்தின் இசைவெளியீட்டில் கலந்துகொண்ட பிரபலங்களில் இயக்குனர் மகிழ்திருமேனி சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்..
மகிழ்திருமேனி விழாவுக்கு வந்திருந்த இயக்குனர் கௌதம் மேனனை சுட்டிக்காட்டி பேசும்போது, “காக்க காக்க’ படம் தயாராவதற்கு முன்பு, அந்த சமயத்தில் அவரிடம் உதவி இயக்குனராக இருந்த நான், ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு டேட்டிங் போகவேண்டிய சூழல் ஏற்பட்டது.. ஆனால் என்னிடம் பணம் இல்லை.. அதனால் இயக்குனரிடம் சென்று நேரடியாக விஷயத்தை சொல்லி ஒரு குறிப்பிட்ட தொகை தருமாறு கேட்டேன்..
ஆனால் அவரோ, அவர் இருந்த அந்த சிரமமான சூழ்நிலையிலும், நீ கேட்கும் பணம் நிச்சயமாக உனக்கு பத்தாது என கூறி, நான் கேட்டதை விட மூன்று மடங்கு அதிகமான பணம் செலவுக்கு கொடுத்து அனுப்பினார்.. ஒரு இயக்குனர் தனது உதவி இயக்குனரிடம் இந்த அளவுக்கு தன்மையாக நடந்துகொள்வது என்பது அரிதிலும் அரிது” என்று குருவை பாராட்டி பேசினார்