சூர்யா-கார்த்திக்கு சங்கடத்தை ஏற்படுத்திய ஞானவேல்ராஜாவின் செயல்..!


ரோம் நகரம் பற்றி எரிந்துகொண்டு இருக்கும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தான் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே.. அதேபோன்ற ஒரு செயலைத்தான் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் செய்து சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார்.. கடந்த சில நாட்களாகவே காவிரி பிரச்சனை தொடர்பாக இரண்டு மாநிலங்களுக்கு இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவுகிறது.

கர்நாடாகாவில் இருக்கும் நம்மவர்களை அவர்கள் தாக்குவது ஒரு பக்கம் இருக்க, கன்னட திரையுலகினரும் நமக்கு எதிரான கோஷங்களை கிளப்பி வருகிறார்கள்.. நம்மவர்கள் அந்த அளவுக்கு மோசமான செயலில் இறங்காவிட்டாலும் அவர்கள் மீதான கோபத்துடன் இருப்பதென்னவோ உண்மை.. இந்த நேரத்தில் தான் கன்னட நடிகர் உபேந்திராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

பிறந்தநாள் வாழ்த்து கூறுவது நல்ல விஷயம் தான் என்றாலும், இப்போதைய சூழலில் அது மாபெரும் தவறாகவே கருதப்படும். மேலும் கன்னட நடிகரான உபேந்திரா, மற்ற சில கன்னட நடிகர்களை போல கமுக்கமாக இருக்காமல், காவிரி பிரச்சனையில் தமிழகத்துக்கு எதிரான கருத்துக்களை உக்கிரமாக கூறியுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தது எந்த விதத்தில் நியாயம், இப்போது அதை தெரிவிக்கவேண்டிய கட்டாயம் என்ன என அவர் மீது பலரின் கோபமும் திரும்பியுள்ளது.

சிவகுமார், சூர்யா, கார்த்தி போன்றவர்கள் தமிழர்களின் உரிமையை விட்டுத்தராமல் குரல் கொடுக்க, அவர்களால் வளர்ந்த, அவர்கள் மூலம் வாழ்வு பெற்ற ஞானவேல்ராஜா, இப்படி செய்திருப்பது நிச்சயம் அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துவது போன்ற செயல் தானே அன்றி வேறென்ன..?