சிலருக்கு நம்பிக்கை பலம் தரும்.. இன்னும் சிலர் தன்னம்பிக்கையை துணைக்கு வைத்திருப்பார்கள். ஆனால் இது இரண்டும் கலந்த கலவை தான் நான் என சொல்லாமல் சொல்கிறார் ‘ரோமியோ ஜூலியட் இயக்குனர் லட்சுமண்.. அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படமான ‘போகன்’ படத்தையும் ஜெயம் ரவியை வைத்தே இயக்கி வருகிறார்.
ஜெயம் ரவி மீது இவர் அளவு கடந்த பக்தி வைத்திருக்கிறார்.. அதற்கு காரணம் கேட்டால், “நான் வாய்ப்பு தேடியபோது பல பேர் என்னுடைய கதையை நம்பவில்லை. ஆனால் ஜெயம் ரவி மட்டும்தான் என்னை நம்பி உன்னால் முடியும் என்று ஊக்கமளித்தார்.” என்கிறார்
அந்த பக்தி எந்த அளவுக்கு என்றால் ஒருவேளை ரஜினியே இவரை அழைத்து ஒரு படம் இயக்கச் சொன்னார் என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் ஜெயம் ரவி இவரை அழைத்து அவருக்காக ஒரு படத்தை இயக்கச் சொன்னால் கண்டிப்பாக ஜெயம் ரவி படத்தைத்தான் இயக்குவாராம்.. ஏனென்றால் அவரை கடவுளுக்கு அடுத்தபடியாக வைத்திருக்கிறாராம் இவர்…