அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாய், இருப்பதைவிட்டு பறப்பதை பிடிக்க அலைந்து இருப்பதும் கிடைக்காமல் போன நடிகைகளில் முதல் இடம் அசினுக்கு என்றால் அடுத்த இடம் ஒல்லி ஒல்லி இடுப்பழகி இலியானாவுக்குத்தான். இங்கே தமிழில் ‘கேடி’ படத்தில் அறிமுகமானபோது அவருக்கு அட்ரசே கிடையாது..
ஆனால் தெலுங்கில் நுழைந்து எப்படியோ மார்க்கெட்டை பிடித்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்ததும் பந்தா சற்றே கூடிப்போனது.. அதன்பின் தமிழில் நடிக்க முடியாது என கறாராக இருந்தவர், அடுத்து தமிழில் ‘நண்பன்’ படத்தில் நடித்தது கூட ஷங்கர்-விஜய் என்கிற மாஸ் காம்பினேஷன் இருந்ததால் தான்.
தெலுங்கை தொடர்ந்து இந்தியில் ஒன்றிரண்டு படங்களில் வாய்ப்பு வர தெலுங்கை உதறினார். அதை தொடர்ந்து தெலுங்குப்படமும் அவரை உதறியது.. பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த அவர் அடுத்து திருமணத்துக்கு தயாராகிறார் என சொல்லப்பட்டும் வந்தது.. அந்த அதிர்ஷ்டசாலி தொழிலதிபர் யாராக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.
ஆனால் இப்போது ஷாக்கிங் நியூஸாக, இலியானா ஒரு போட்டோகிராபரை காதலிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.. அதுவும் உள்ளூர் ஆள் இல்லை.. ஆஸ்திரேலிய அப்பாடக்கராம்.. பெயர் ஆண்ட்ரூவாம்.. இலியானாவை புகைப்படம் எடுக்கும்போது இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலாகி, விரைவில் திருமணத்தில் முடிய இருக்கிறதாம்.